ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் ஆர்யாவின் காதர்பாட்ஷா…

May 22, 2023 at 5:44 am
pc

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website