ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் இலியானாவின் குழந்தை புகைப்படம் .

October 10, 2023 at 7:18 pm
pc

நடிகை இலியானா கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு குழந்தை பிறந்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் சற்றுமுன் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழில் ’கேடி’ ’நண்பன்’ ஆகிய படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை இலியானா. இவர் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்த நிலையில் அந்த குழந்தையின் பெயரையும் அறிவித்தார். மேலும் இலியானா குழந்தையின் அப்பா மைக்கேல் என்றும் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குழந்தையின் படுகைக்கு மேலே ஒரு சிறிய பறவை பொம்மையை கட்டி வைத்திருந்த இலியானா, ‘அந்த பறவை பொம்மையை குழந்தை பார்க்கும்போது, குழந்தையின் முகம் எப்படி ஒளிரும் என்பதை நான் பார்க்க ஆவலுடன் உள்ளேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website