தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த ‘உறியடி’ விஜயகுமார்..

February 23, 2023 at 6:56 pm
pc

உறியடி படத்தின் நடிகரும் இயக்குநருமான விஜய்குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ், ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

1930-களின் பின்னணியில நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாக உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website