தனுஷுக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ.. ரூ.120 கோடி பட்ஜெட்.. மாஸ் தகவல்கள்..!

September 13, 2024 at 11:19 am
pc

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாஸ் ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த பட்ஜெட் படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்றும் கூறப்படுவது கோலிவுட் திரை உலகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஒரு பக்கம் திரைப்படங்கள் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சில திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

தனுஷ் நடித்த அவரது ஐம்பதாவது படமான ’ராயன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி ’குபேரா’ ‘இளையராஜா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஒரே படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்றும் இந்த படத்தை ஆகாஷ் என்பவர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கவுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website