தமன்னா உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்ல.. ராதா ரவி சர்ச்சை பேச்சு!திட்டிதீற்கும் ரசிகர்கள்…

July 1, 2022 at 4:02 pm
pc

கனல் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி தமன்னாவை பற்றி பேசியதை பார்த்தவர்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.


சமய முரளி இயக்கியிருக்கும் கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சீனியர் நடிகரான ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

ஹீரோயினை பற்றி பேசியபோது அவர் கூறியதாவது,

அது யாரு சமந்தாவா, இல்லை சமந்தா இல்லை. தமன்னா. உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்ல. நானும் சுத்தி சுத்தி பார்த்துட்டேன். கொஞ்சம் கூட கருப்பே இல்ல. கனல் பட ஹீரோயினும் அதே போன்று செகப்பா, அழகா இருக்கார்.

கிளாமராக நடிப்பார்னு நினைச்சேன். ஆனால் படத்தை பார்த்தபோது தான் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் என்பது தெரிந்தது என்றார்.

தமன்னாவை பற்றி ராதா ரவி பேசியதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். எதையாவது பேசுகிறேன் என்று எப்பொழுது பார்த்தாலும் நடிகைகளை பற்றி இப்படி மோசமாக பேசும் ராதாரவியை ஏன் பட விழாக்களுக்கு அழைக்கிறார்கள். சர்ச்சையை வைத்தே விளம்பரம் தேட இதெல்லாம் ஒரு வழியா.

இந்த ராதாரவியை கண்டிப்பாரே இல்லையா என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னதாக நயன்தாராவை பற்றி ராதாரவி பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து அவர் லேடி சூப்பர் ஸ்டாரையே தப்பாக பேசியவர் என்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website