தமன்னா பற்றிய சர்ச்சை கருத்து: விளக்கம் அளித்த பார்த்திபன்!

July 20, 2024 at 9:23 am
pc

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் நடிகராக வலம் வருபவர் தான் பார்த்திபன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது” என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் தான் பார்த்திபன் மறைமுகமாக சொல்லுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன், தனது பக்கத்தில், ” நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website