தமிழகத்தில் மேலும் ஒரு உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி!

March 7, 2023 at 5:40 am
pc

சென்னை தாம்பரத்தில் வசிப்பவர் ஆன்லைன் ரம்மி செயலியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45) என்பர் ஆன்லைனில் ரம்மி விளையாடத் தொடங்கியபோது சிறிய அளவிலான பணத்தை வென்றுள்ளார். பின்னர் விளையாட்டிற்கு அடிமையாகியதால் அதிக பணம் சேர்க்க ஆரம்பித்தார்.

நன்றாக விளையாடினாலும் சில சமயங்களில் தோல்வி அடைந்ததால் பணத்தையும் இழந்துள்ளார். விளையாட்டை நிறுத்துமாறு மனைவி பலமுறை கேட்டும், அவர் செவிசாய்க்கவில்லை.

பின்னர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தேடிய போது அவரது தொலைபேசியில் கடிதம் ஒன்று எழுதி புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

அதில் “ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என எழுதியுள்ளார். இதனை பார்த்து பயந்து போன அவரின் மனைவி பொலீசாரிடம் முறையிட்டுள்ளனர்.

விசாரணையின் போது கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நண்பர்களிடமும் கடன் வாங்கி ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்தவர் கடிதம் எழுதி வைத்து மாயமாகியுள்ளார்.

பின்னர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரின் உடல் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

உடலை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website