தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் போன்ற பிரபலங்களின் ட்விட்டர் “Blue Tick” நீக்கம்: காரணம் இது தான்

April 23, 2023 at 3:46 pm
pc

 எலோன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் புளூ டிக்கை யார் வேண்டுமெனாலும் பணம் கொடுத்து வாங்கலாம் என கூறியதால், ட்விட்டரில் நிறைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ட்விட்டரில் புளூடிக் நீக்கம் 

எலோன் மஸ்க் ட்விட்டரில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். மேலும் புளூ டிக் விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்குவதற்கு முன்னரே சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

புளூ டிக் முறை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டுமென அவர் கூறியிருந்தார். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் சந்தா கட்டினால் புளூ டிக் பெறலாம் என்ற முறையை ஆரம்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பல பிரபலங்களின் ஐடிகளது புளூடிக் சில தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. மேலும் பணம் கட்டினால் மட்டுமே புளூ டிக் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரபலங்கள் புறக்கணிப்பு 

இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த்,விஜய் போன்றவர்களது ட்விட்டர் கணக்குகளின் புளூ டிக் நீக்கியுள்ளனர். எனவே பிரபலங்களுக்கே பணம் கட்டினால் தான் புளூடிக் என்ற திட்டத்தை தற்போது நிலவி வருகிறது. இதற்கு எதிராக பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

புளூ டிக் என்பது முன்னர் பிரபலங்கள் தாங்கள் பெருமை வகையில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. 

மேலும் யார் வேண்டுமானாலும் புளூ டிக் பெற்று பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை போலியாக பயன்படுத்தலாம் என்ற நிலை நிலவுகிறது. இதற்கு பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அமிதாப்பச்சன் கிண்டல் 

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவரது ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்ட பின்பு தனது ட்விட்டர் பதிவில்

”ஏய் ட்விட்டர்! நீங்கள் கேட்கிறீர்களா? நான் அமிதாப்பச்சன் என்பதை மக்கள் அறியும் வகையில் எனது பெயருக்கு முன்னால் உள்ள புளூ டிக்கை மீண்டும் போடுங்கள். கூப்பிய கையோடு வேண்டுகிறேன்… இப்போது உங்கள் காலில் விழ வேண்டுமா?” என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு புளூ டிக் கிடைத்து விட்டதென, எலோன் மஸ்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தான் நடித்த படத்தின் பாடலை போட்டு ட்விட் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது புளூடிக் போய்விட்டதாக வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் புளூ டிக் பெற்றுள்ளார். அதற்கு அவர் மகிழ்ச்சியடைவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website