தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதியின் மருமகளாகும் பிரபல நடிகை மேகா ஆகாஷ்..!!



பிரபல சண்டிகை மேகா ஆகாஷுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அவரின் வருங்கால கணவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதியின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. யார் அந்த முக்கிய புள்ளி தெரியுமா?தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த மேகா ஆகாஷ், தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார்.சிம்புவுடன் வந்த ‘‘வந்தா ராஜாவாதான் வருவேன்’’, தனுஷுடன் ‘‘எனை நோக்கி பாயும் தோட்டா’’, விஜய் சேதுபதியுடன் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’’, சந்தானத்துடன் ‘‘வடக்குப்பட்டி ராமசாமி’’, விஜய் ஆண்டனியுடன் ‘‘மழை பிடிக்காத மனிதன்’’ போன்ற படங்களில் தற்போது வரை நடித்துள்ளார்.
எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா ஆகாஷுக்கு சில நாட்களுக்கு முன் காதலருடன் நிச்சயதார்த்தம் நடனது முடிந்தது.இணையம் முழுவதும் மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.. பலரும் யார் அவரது வருங்கால கணவர் என்று தேடி வந்த நிலையில், மிக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன் படி, பிரபல நடிகை மேகா ஆகாஷ் காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபர் வேறு யாரும் இல்லை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு.
இன்று நடிகை மேகா ஆகாஷ் தனது வருங்கால கணவர் சாய் விஷ்ணுவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று திருமணத்திற்கு அழைப்புவிடுத்தார், உடன் திருநாவுக்கரசர் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.
சூப்பர் ஸ்டாருடன் இருக்கும் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு இருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.