தமிழ்ப்பட நடிகையுடன் இரண்டாவது திருமணம்: நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு

December 6, 2024 at 11:25 am
pc

நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்துள்ள நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஐதராபாத்தில் திருமணம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நாகார்ஜுனா. இவரது மூத்த மகன் நாக சைதன்யா 2009ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். 

இவருக்கும், தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த சோபிதா துலிபலாவுக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 38 வயதாகும் நாக சைதன்யா 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை ஊதியம் பெறுகிறார். 

இவரது சொத்து மதிப்பு ரூ.154 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவுக்கு ஐதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர குடியிருப்பு உள்ளது. 

மேலும் பெர்ராரி F430, போரஸ்சே 911, GT3 RS மற்றும் Mercedes-Benz G-Class G63 AMG விலையுயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.அத்துடன் BMW R9T மற்றும் Triumph Thruxton R ஆகிய விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களையும் நாக சைதன்யா வைத்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website