தயாரிப்பாளரை வாட்டி வதைக்கும் சூர்யா ரசிகர்கள்..ஏன் இப்படி போஸ்டர் அடிச்சு அசிங்க படுத்துறங்க?




நடிகர் சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் கடந்த சில மாதங்களாக வெளியாகாத நிலையில் கடுப்பான சூர்யா ரசிகர்கள் படக்குழுவினர்களிடம் ’எங்க அண்ணனை விட்ருங்க’ என்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான ’சூர்யா 44’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ’கங்குவா’ படத்தின் அப்டேட் கடந்த சில மாதங்களாக வராத நிலையில் சூர்யா ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ’கங்குவா’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகாத கோபத்தில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் போஸ்டர் மூலம் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். அதில் ’கங்குவா’ படத்தின் அப்டேட் உடனே வேண்டும் என்றும் படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும் தைரியமும் இருந்தால் மட்டுமே படத்தை தயாரியுங்கள் என்றும் நீங்கள் உங்கள் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க, எங்க அண்ணனை விட்டுருங்க’ என்றும் அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.