தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள்…குவியும் பாராட்டுக்கள்..!

May 16, 2022 at 6:11 pm
pc

தமிழ் சினிமாவில் தன் கடின உழைப்பால் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்திருக்கிறார் விஜய். 18 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைத்த விஜய் பார்க்காத வெற்றிகளும் இல்லை சந்திக்காத தோல்விகளும் இல்லை. இருப்பினும் எதற்கும் செவி சாய்க்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார் விஜய்.

தன் ரசிகர்களை மனதில் வைத்த தன் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய்யை ரசிகர்கள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசித்து வருகின்றனர். கடந்த பொங்களன்று கடுமையான கொரோனா சூழலிலும் தன் படத்தை திரையில் மட்டுமே வெளியிடுவேன், அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள் என மாஸ்டர் படத்தை காத்திருந்து ரசிகர்களுக்காக திரையில் வெளியிட்டார் விஜய்.

அப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website