தளபதி 68இல் ஜெய்ராம் இணைகிறார் .

October 17, 2023 at 7:21 pm
pc

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகிய மூன்று பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது 90களில் நாயகனாக நடித்த இன்னொரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்தான் நடிகர் ஜெயராம்.

நடிகர் ஜெயராம் தமிழில் ’கோகுலம்’ ’பிரியங்கா’ ’கோலங்கள்’ ’முறைமாமன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ’தெனாலிராமன்’ ’பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் ஏற்கனவே விஜய் நடித்த ’துப்பாக்கி’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜெயராம் தற்போது மீண்டும் அவருடன் ’தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தில் இன்னும் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website