தளபதி 68 படத்தில் விஜய் வாங்கப் போகும் சம்பளம்..ரூ.150 கோடி …!!

May 19, 2023 at 11:08 am
pc

தற்போது சமூகவலைத்தளங்களில் தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கப்போகும் சம்பளம் குறித்த தகவல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலை அள்ளியது.

இந்நிலையில் நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை த்ரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் வாங்கப் போகும் தளபதி 68 பட சம்பளம்?

தற்போது, தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கப்போகும் சம்பளம் குறித்த தகவல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய்யின் 68-வது படத்தில் நடிக்கப்போவதாகவும், இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் ரூ.150 கோடி சம்பளமாக வழங்க ஏஜிஎஸ் நிறுவனம் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி வாங்கும் சம்பளத்தை தற்போது விஜய் முந்தியுள்ளார். இதனையடுத்து, நடிகர் பிரபாஸுக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் தான் ரூ.150 கோடி சம்பளமாக வாங்க போவதாக தகவல் கசிந்துள்ளது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website