தாத்தாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் நடிகர் தனுஷின் மகன்- வியந்து போன ரசிகர்கள்

July 17, 2022 at 9:38 am
pc

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குயாத்ரா 16 வயது மகனும், லிங்கா என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

18 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகவும் தமது எதிர்கால வாழ்வை முன்னிட்டும் விவாகரத்து பெறப் போவதாக அறிவித்திருந்தனர். இவர்களை சேர்த்து வைக்க இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இருப்பினும் எந்த முயற்சியும் சாத்தியப்படவில்லை. அத்தோடு விரைவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.இருவரும் ஒன்றாக வசித்த வீட்டிற்கு அடிக்கடி தனித்தனியாக சென்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் போட்டோவும் நடிகர் ரஜினிகாந்தின் இளவயது போட்டோவும் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் இளம் வயதில் தனது தாத்தா இருந்தது போன்று உள்ள யாத்ரா, அவர் பின்னால் கையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தது போன்று கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அதே ரத்தம்… அப்படியே தாத்தாவை போன்றே இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். மேலும் யாத்ரா செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் சிறிய கதாப்பாத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website