தாமரை விதைய இப்படி ஃப்ரை பண்ணி கொடுங்க… எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க ….!!

தேவையான பொருட்கள்
100 கிராம் தாமரை விதை
3/4 கப் வறுத்த வேர்க்கடலை
1 தேக்கரண்டி தூளாக்கப்பட்ட மிளகு
தேவையான அளவு கறிவேப்பிலை
1 1/2 தேக்கரண்டி நெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
ஒரு பேனில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது மக்கானா எனப்படும் தாமரை விதைகளைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும்.
மக்கானா பொன்னிறமானதும் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பண்டிகை காலங்களில் மொறுமொறு மாலை நேர ஸ்நாக்ஸாக பரிமாறுங்கள்!