தினசரி 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

February 29, 2024 at 8:38 am
pc

கடவுள் நமக்கு அளித்த எண்ணற்ற வரப்பிரசாதங்களில் ஒன்று தான் அத்திப்பழம், மற்ற பழங்களை விட இதில் நான்கு மடங்கு சத்துக்கள் உண்டு. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு சிறந்தது.

உணவை எளிதில் ஜீரணிக்க செய்து சுறுசுறுப்பை வழங்குகிறது, பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி கல்லீரல், நுரையீரலில் உள்ள தடுப்புகளை நீக்குகிறது.

அத்திப்பழத்தின் காய்களில் இருந்து வரும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

நாள் ஒன்றுக்கு 2 அத்திப்பழங்கள் சாப்பிட்டு வருவது ரத்த உற்பத்தியை பெருக்கும், இரும்புச்சத்து அதிகரிக்கும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களும் அத்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம், வெள்ளைப்படுத்தலை கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த அத்திப்பழமானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, ஆனால் உலர் அத்திப்பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் குறைந்த அளவு எடுத்துக்கொள்வது சிறந்தது.

அத்திப்பழத்தில் பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்திருப்பதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கிறது, ரத்த நாளங்களில் அடைப்புகளை போக்குவதுடன் இதய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதிலுள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளையும் வலுப்படுத்தும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website