தினமும் புளியை கொஞ்சம் சேர்த்துகிட்டா எடை குறையுமா…? எப்படினு தெரியுமா …?

October 14, 2022 at 7:13 am
pc

புளி உணவின் சுவையைக் கூட்டும் தன்மை கொண்டது. வறட்சியான இடங்களில் கூட விளையக்கூடிய பழ வகையில் ஒன்று தான் இந்த புளியம்பழம். அறுசுவைகளில் முக்கியமான ஒரு சுவையான இந்த புளிப்புச்சுவை இருக்கிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும்.

100 கிராம் அளவுக்கு புளியில் கிட்டதட்ட 230 கலோரிகள் இருக்கின்றன. இதில்,

கார்போஹைட்ரேட் – 62.5 கிராம்
சர்க்கரை – 57.4 மி.கி
டயட்டரி ஃபைபர் – 5.1 கிராம்
கொழுப்பு – 9.6 கிராம்
புரதச்சத்து – 2.8 கிராம்
ஆகியவை இருக்கின்றன. மேலும் இதில்

வைட்டமின் பி1, பி2, பி3. பி5. பி6. பி9. குளோரின், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க் ஆகிய ஏராளமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

உணவை கட்டுப்படுத்தும்

சிலருக்கு நொறுக்குத் தீனி சாப்பிடுவது பழக்கமாக இருக்கும். குறிப்பாக அதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். அதனாலேயே அதிகமாக கொழுப்புகள் தேங்க ஆரம்பித்து உடல் எடை கூடிவிடும்.

புளியில் வைட்டமின்கள். மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். இது தொண்டை வலியை சரிசெய்யும். இதிலுள்ள ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதோடு அதிகமாக பசி எடுப்பதையும்
அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுக்கவும் புளி உதவுகிறது.

​ஆரோக்கியமான ஜீரண மண்டலம்


உடலில் உள்ள கழிவுகளும் கொழுப்பும் முறையாக வெளியேறாமல் உடலிலேயே தங்கி, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற ஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உடலில் உள்ள மெட்டபாலிசம் சீராகவும் வேகமாகவும் இருந்தால் உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும். இந்த ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கு புளி உதவுகிறது.

​லாக்டேட்டிவ் தன்மை கொண்டது

புளியின் சாறில் உள்ள மினரல்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை சேர்ந்து வயிற்றில் லாக்டேட்டிவ்வாக செயல்படுகிறது.

இது வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

​ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் கொண்டது

புளியில் அதிக அளவில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இது சிட்ரிக் அமிலத்தைப் போலவே செயலபடும். மற்ற சில தாவரங்களிலும் இந்த ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் இருக்கிறது என்றாலும் கூட புளியில் மிக அதிகமாக இந்த ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் இருக்கிறது.

இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடற்பயிற்சி செய்யும்போது கொலஸ்டிரால் எரிக்கப்படுவதை போலவே புளியும் எரிக்கும். இதனால் உடல் எடை சீராகக் குறைய ஆரம்பிக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website