தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா…?

May 27, 2022 at 7:36 pm
pc

இன்று உலகம் முழுவதும் அனைத்தும் மக்களிடையே டீ, காபி கு டிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அதெல்லாம் பல எதிர்கால பிரச்சனைகளில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பது தெரியாமல் தினமும் இரண்டு, மூன்று முறை குடித்து வருகிறார்கள். ஆனால், எல்லா தேநீர் வகைகளும் கெடுதல் கிடையாது. அந்த வகையில் கிரீன் டீ எப்போதும் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் நன்மைகள் தெரியாமல் பலர் இதை தவிர்க்கிறார்கள்.

ஆனால், உலகிலேயே அதிகம் கிரீன் டீயை குடிப்பவர் ஜப்பானியர்கள் தான். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு கிரீன் டீயில் உள்ள உட்பொருட்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். கிரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். அந்த வகையில், தினமும் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

சாதாரண காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம். பலருக்கும் தெரிவதில்லை கிரீன் டீயை எப்படி தயார் செய்யவேண்டும் என்று. கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. காயவைக்கப்பட்ட கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். அதன் ஃபிளேவர் வெந்நீரில் கலந்தவுடன், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சில துளி எலுமிச்சை சாறு, தேன் கலந்துக்கொள்ளுங்கள். இப்படி குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும். குறிப்பாக, கிரீன் டீயில் சேர்க்கக்கூடாது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

கிரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின், எபிகேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள்ளன. இதனால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரீன் டீயை வெறும் வயிற்றில் ஒரு கப் குடித்தால், உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சிக்கென்று ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்பு செல்களை கரைய செய்து, உடல் குறைய வழிவகுக்கும். மேலும் மற்ற டீக்களை விட கிரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன. உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது இந்த கிரீன் டீ.

கிரீன் டீயில் இருக்கும் எபிகேலோகேட்டசின் 3 கேலேட், உடலில் வளரும் புற்றுநோய் செல்களிம் வளர்ச்சியைத் தடுத்து அதை அடியோடு அழித்துவிடுகிறது. இது ஒரு ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டிஆக்ஸிடண்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதால், உடலில் தேவையற்ற கட்டிகள் வளரவிடாது. பல விதமான புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றல் கிரீன் டீ க்கு உள்ளது.

கிரீன் டீயில் காப்ஃபைனுடன், L-தயனைன் என்னும் அமினோ அமிலமும் இருக்கிறது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், வாரத்திற்கு குறைந்தது 6 கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தபட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

ஹீமோதெரபி, ஆன்டிபயாடிக்ஸ், இரத்தத்தை மெலியச் செய்யும் மருந்துகளை உட்கொள்பவர்கள், கிரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இதயநோய், அல்சர், சிறுநீரக கோளாறு, உளவியல் கோளாறுகள் உள்ளவர்கள் கிரீன் டீயைக் குடிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோனை கேட்டு குடிப்பது நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website