தினமும் வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா ….?

August 1, 2022 at 11:05 am
pc

தினமும் காலையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பயன்களை பெறலாம் என்பதை இதில் பார்ப்போம் .
எலுமிச்சை பழத்தில் மிக சிறப்பான ஊட்டச்சத்துக்கள் உள்ளன .இவற்றை நமது ஆரோக்கிய நலனுக்காக எடுத்து கொள்வது சிறந்தது .காலையில் நாம் எலுமிச்சை பழத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைகின்றன .

எலுமிச்சையின் பயன்கள் :

பொதுவாக எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவ கூடிய பித்த நீரை சுரக்க உதவுகிறது .
செரிமான பாதையில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும் .
காலையில் எழுந்த உடன் இதனை குடிக்கும் போது குடல் இயக்கம் சீராக இருப்பதை உணரலாம் .

காலையில் எலுமிச்சை சாறை குடிக்கும் முறைகள் :

முதலில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொண்டு அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும் .
அதில் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் பருக வேண்டும் .
இதன் மூலம் எலுமிச்சையில் இருக்க கூடிய நார் சத்தான பெக்டின் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்க உதவுகிறது .
ஏதன் காரணமாகவே உடல் எடை மிக வேகமாக குறையும் .எனவே உடல் எடை விரைவாக குறைய வேண்டும் என நினைப்பவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் எளிமையாக உடல் எடையை குறைக்க முடியும் .
மேலும் எலுமிச்சை பழச்சாறானது இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது .இதனால் சீறுநீரில் அளவை அதிகரிக்கும் .அதன் மூலம் நம் உடலில் உள்ள நச்சுக்கள் சீறுநீர் வழியாக வெளியேறி சீறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கிறது . மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லிரலில் நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்க உதவுகிறது .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website