திராட்சைப்பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

August 31, 2022 at 9:40 am
pc

திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதுமட்டுமின்றி, பொஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி, வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.

நன்மைகள்

இரத்தத்தை சுத்தம் செய்ய

திராட்சை பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்., நரம்புகளுக்கு வலுவூட்டும்.

எடை குறைவாக மர்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல்

திராட்சை பழத்தை தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது.

மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது.

எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.

கொலஸ்ட்ரால்

நாம் உண்ணும் சில வகை உணவுகளிலும் மற்றும் எண்ணெய்களிலும் கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.

ரத்த அழுத்தம்

திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது. மேலும், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.

மன அழுத்தம்

திராட்சை உடல் மற்றும் சோர்வடையும் பொதும், பதற்றமடையும் போதும் உடல் நலத்தை பாதிக்கும் சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றன.

மேலும், திராட்சைப்பழங்களில் இந்த தீய ரசாயனத்தை கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனதிற்கு சிறந்த நிவாரணமாக இருந்து, மனஅழுத்தத்தை போக்குகிறது.

நோய் எதிர்ப்பு தன்மை

திராட்சைப்பழங்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன.

இவர்கள் இந்த திராட்சைப்பழங்கள் சிலவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

சத்தான உணவு

திராட்சை பழங்கள் மனிதர்களின் உடலுக்கு பல சத்துக்கள் மற்றும் போஷாக்கை அளிக்க கூடியதாகும்.

இந்த பழங்களை அப்படியே சாப்பிடுவதாலும், காய வைத்து உலர் திராட்சைகளாக சாப்பிடுவதாலும், ஜூஸ் போட்டு அருந்தினாலும் ஆரோக்கியம் நிறைந்த சிறந்த உணவாக இருக்கிறது.

சிறுநீரக பிரச்சினைக்கு

நமது உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன.

ஒருவரின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். தினமும் சில திராட்சைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரக கற்கள் வரமால் காக்கும்.

ஒற்றை தலைவலி

தலைவலி அனைவரையுமே மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் ஒரு பாதிப்பாகும். அதிலும் ஒற்றை தலைவலி ஏற்படும் போது தலையில் ஏற்படும் வலி தாங்க சில திராட்சை பழங்களை நன்கு மென்று சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்.

மார்பக புற்றுநோய்

திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் காரணமாக மார்பக புற்றுநோய் செல்கள் அளிக்கப்படுகிறது.

இதனால் பெண்கள் திராட்சை பழங்களை சாப்பிடலாம். மேலும், ரெஸ்வெற்றல் அமிலம் மூலமாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுக்குள் வைக்கிறது.

ஆஸ்துமா

திராட்சை பழம் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நுரையீரலுக்கு நன்மை அளிக்கிறது.

திராட்சை பழத்தில் இருக்கும் டாக்சின்கள் இரத்தம் தொடர்பான பிரச்சனையை சரி செய்து, இரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உடல் சோர்வு

திராட்சை பழத்தை இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், திராட்சை பழத்தின் சத்துக்களால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதால், இரவு வேளைகளில் திராட்சை பழச்சாரை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை இருக்கும் நபர்கள் வெறும் வயிற்றில் திராட்சை பழச்சாறை சாப்பிட வேண்டாம். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website