திரிஷாவுக்கு டாட்டூ மீது அதீத பிரியம்- அந்த இடத்தில் இப்படி ஒரு டாட்டூ….

April 20, 2023 at 12:01 pm
pc

சினிமா மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதுகில் சினிமா கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி உள்ளார். 

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் திரிஷா கிருஷ்ணன் தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

இதுதவிர லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தையும் கைவசம் வைத்துள்ளார் திரிஷா. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. 

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

மேலும் தி ரோடு என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா. 

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு டாட்டூ மீது அதீத பிரியம் உண்டு. அதனால் தனக்கு பிடித்தவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்வார். 

அந்த வகையில் நெஞ்சில் நெமோ என்கிற மீனை டாட்டூவாக போட்டுள்ள திரிஷா, கையில் தனது ராசியின் சின்னத்தை டாட்டூவாக குத்தி உள்ளார். இந்த இரு டாட்டூக்களை பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவர் போட்டுள்ள மற்றொரு டாட்டூ தான் ஹைலைட்டானது. 

அதன்படி சினிமா மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதுகில் சினிமா கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி உள்ளார். 

அவர் இந்த டாட்டூவை கடந்த 2016-ம் ஆண்டே போட்டுக்கொண்டாலும் பெரியளவில் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானதில்லை. 

நடிகை திரிஷா குத்திக் கொண்ட டாட்டூக்களிலே இது தான் பெரியது. தற்போது பொன்னியின் செல்வன் பட புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களில் திரிஷாவின் சினிமா கேமரா டாட்டூவை பார்த்து வியந்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website