திருமணத்திற்கு ரெடியான நடிகை ஹன்சிகா…அரசியல்வாதி மகன்தான் மணமகன்!!

August 6, 2022 at 9:04 pm
pc

தமிழ் சினிமாவில் முன்னணிநடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடியாக நடித்திருக்கிறார். 

மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவரை அதிகமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இதனிடையே அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மஹா திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது. 

இதன்பின் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அரசியல்வாதி மகன்

இந்நிலையில், நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்றும் கூறப்படுகிறது.

மணமகன் தென்னிந்தியாவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் தான் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website