திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்? – மனம் திறந்த கோவை சரளா!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக இருப்பவர் கோவை சரளா. ஆச்சி மனோரமா அவர்களுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகையாக யார் வருவார் என்று இருந்த நிலையில் கோவை சரளா அந்த இடத்திற்கு வந்தார். குறிப்பாக இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் மிகவும் பிரபலம்.
62 வயதாகும் நடிகை கோவை சரளா இதுவரை திருமணமே செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில், நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம், இறக்கும் போது தனியாகத்தான் இறக்கிறோம்.
இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள், எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என பேசியுள்ளார்.