திருமணம் செய்யாமல் கர்ப்பமான இலியானா!


திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இலியானா வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. தெலுங்கில் நடிகர் ராம் பொதேனி நடிப்பில் வெளியான ‘தேவதாசு’ என்ற படத்தில் முதன் முதலாக சினிமா திரையுலகில் அறிமுகமானார்.
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த இலியானாவிற்கு பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய்யுடன் ‘நண்பன்’ என்ற படத்தில் நடிக்க இலியானாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தன்னுடைய கொடியிடை இடுப்பின் அழகால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்டார் இலியானா. தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்து வந்த இலியானா இந்தி திரையுலகம் பக்கம் திரும்பி பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி பிகினி உடையிலும் நடித்தார்.
இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து வந்தார். ஆனால், இந்த காதல் சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து நடிகை இலியானா, பிரபல நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவருடன் இலியானா லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். இருவரும் வெளிநாடுகளுக்கு டேட்டிங்கும் சென்று வந்தனர்.
சமீபத்தில் திடீரென்று இன்ஸ்டாவில் இலியானா ஒரு குழந்தையின் ஆடையுடன்… மம்மா என்ற டாலர் அணிந்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு மறைமுகமாக கூறினார்.
இதைப் பார்த்த பலர் என்ன… இது… திருமணமே ஆகாமல் கர்ப்பமாகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், நடிகை இலியானா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வயிறு பெரிதாகி கர்ப்பமாக இருக்கிறார் இலியானா.
தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி திருமணம் ஆகாமல் கர்ப்பமாகிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.