திருமண சான்றிதழை பச்சை குத்திக் கொண்ட கணவன்…அதிர்ச்சில் மனைவி!!

February 17, 2023 at 1:14 pm
pc

தாய்லாந்தில் கணவர் ஒருவர் மனைவி மீதுள்ள அதிகப்படியான காதலால் தங்களது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்திக் கொண்டு அசத்தியுள்ளார்.

திருமண சான்றிதழை பச்சை குத்திக் கொண்ட கணவன்

தாய்லாந்தில் வால் என்ற இளைஞர் காதலர் தினத்தை முன்னிட்டு மனைவி மீதுள்ள அதிகப்படியான காதலை வெளிப்படுத்துவதற்காக அவர்களது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இதற்காக சரபுரி மாகாணத்தில் உள்ள டாட்டூ கடை ஒன்றில் அவரது விருப்பத்தை வால் தெரிவித்துள்ளார், முதலில் வால் கூறுவதை புரிந்து கொள்ளாத ஊழியர் திருமண பத்திரிகையை டாட்டுவாக போட வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.

உடனடியாக இல்லை என்று பதிலளித்த வால், திருமண சான்றிதழை டாட்டூவாக போட வேண்டும் என விளக்கியுள்ளார்.

பிறகு 8 மணி நேர நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஊழியர் ஒருவழியாக டாட்டூவை போட்டு விட்டுள்ளார். டாட்டூவும் வால் எதிர்பார்த்தபடியே பச்சை, நீலம், சிவப்பு நிறங்களில் மிகச்சரியாக வந்திருந்தது.

காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசு

சரியாக காதலர் தினத்திற்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 13ம் திகதி இரவு 11.58 மணியளவில் மனைவியிடம் டாட்டூவை வால் காட்டியுள்ளார்.

முதலில் கணவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டுவிட்டது என்று பதறிய மனைவியை சமாதானப்படுத்திய கணவன் வால், பின்னர் விஷயத்தை மனைவிக்கு எடுத்துரைத்துள்ளார்.

டாட்டூவையும் கணவனையும் மாறி மாறி பார்த்த மனைவி இறுதியில் உனக்கு மண்டை குழம்பிவிட்டது, மனநல மருத்துவரை தான் சென்று பார்க்க வேண்டும் என்று திட்டிக் கொண்டே கட்டியணைத்து கொண்டாள் என கணவன் வால் வெளிப்படுத்தியுள்ளார்.

டாட்டூ கலைஞர்

  இது குறித்து டாட்டூ கலைஞர் பேசுகையில், முதலில் சற்று பயத்துடன் தான் வரைந்து கொடுத்தேன், ஆனால் இது புதிய அனுபவமாக இருந்தது.

இதற்கு முன்னதாக இவருடைய மனைவியின் புகைப்படத்தை வால் டாட்டூவாக வரைந்து கொண்டார், இதனால் இது அவர் எனக்கு கொடுக்கும் இரண்டாவது பெரிய அசைமெண்ட் என தெரிவித்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website