தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா விடுமுறை… எத்தனை நாட்கள்; தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு….

October 20, 2022 at 11:03 am
pc

தமிழகத்தில் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வர். இல்லையெனில் உறவினர்களுடன் பண்டிகையை விமர்சையாக கொண்டாட திட்டமிடுவர். இதற்காக முன்கூட்டியே பயணங்களை முடிவு செய்வார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வருவதால், அதற்கு முன்னதாக வரும் சனி, ஞாயிறு ஆகியவை வழக்கமான விடுமுறையாக மாறிவிடுகின்றன.

எனவே மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அனைவரும் வெள்ளிக்கிழமை இரவே புறப்பட்டு விடுவர். இதையொட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளிவந்து விட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி முடிந்த அன்றைய தினமே அவரவர் வசித்து வரும் ஊர்களுக்கு திரும்புவது சாத்தியமானது அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் நெரிசலில் தள்ளாடி விடும். ஒருநாள் தள்ளி செவ்வாய் கிழமை அன்று புறப்படலாம் என திட்டமிடுவர். இவ்வாறு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மக்கள் பிரிந்து புறப்பட்டு செல்வதால் நெரிசல் குறையும்.

தமிழகத்தின் சாலைகள் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைக்கும். இருப்பினும் விடுப்பு எடுக்க வேண்டி வரும். அதுவே செவ்வாய் அன்று தமிழக அரசே விடுமுறை என்று அறிவித்துவிட்டால் யாரும் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை. எப்படியும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏதாவதொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துவிடுவர்.

எனவே அக்டோபர் 25 செவ்வாய் கிழமை அன்று அரசு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையும், எதிர்பார்ப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதை வைத்தே பெற்றோர்களும் எப்போது திரும்பலாம் எனக் கணக்கு போடுவர்.

இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், தீபாவளிக்கு அடுத்த நாள் 25ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. எனவே அதற்கேற்ப திட்டமிட பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் தயாராகத் தொடங்கிவிட்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website