தீபாவளி ரேஸில் இணையும் தமன்னா .

October 17, 2023 at 7:37 pm
pc

தீபாவளி தினத்தன்று கார்த்தியின் ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ‘ரெய்டு’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் தமன்னா நடித்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டு ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

இருப்பினும் தீபாவளி விருந்தாக கார்த்தியின் ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளது. மேலும் சில படங்கள் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா முதன்முதலாக நடித்த மலையாள திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள ’பாந்த்ரா’ என்ற படம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் டீசரில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website