துணி போட்டு உக்காருடின்னு சில்க் ஸ்மிதாவை திட்டுவேன் – நடிகை சுலக்சனா

April 27, 2023 at 12:27 pm
pc

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார். இதுவரை மொத்தம் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுலக்ச்சனா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சினிமாவில் தான் கடந்து வந்த பாதைகளை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். நடிகை சுலக்ச்சனாவிடம் நீங்க சில்க் சுமிதாவுடன் நடித்து இருக்கீங்க அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சில்க் உண்மையாலுமே ஒரு குழந்தை மாதிரி. அவங்களுக்கு வெளி உலகம் எதுவும் தெரியாது.

அவங்களுக்கு எந்த விசயமும் புலப்படாது. நன்றாக உடைகள் அணிந்து கொள்வதில் அவர்கள் மிகவும் ஆர்வம் உடையவர் தனக்கான உடையை தானே வடிவமைத்து கொள்வார் மிகவும் திறமைசாலி அவர். பிறகு அவரிடம் வாழ்க்கையில் உங்களுக்கு நடந்த வலிமிகுந்த தருணம் எதாவது இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை சுலக்ச்சனா வாழ்க்கையே வலி மிகுந்தது தான். தினசரி வாழ்க்கையில் நாம் சில கஷ்டங்களை கடந்து தான் ஆக வேண்டும். அதை நினைத்து வருத்தப்படக்கூடாது என்று பதில் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website