துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை தட்டிச்சென்ற அஜித்! 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்கள்….

நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி, பைக், கார் ரேஸ், ஏரோனாடிக்கல் இஞ்சினியரிங், துப்பாக்கி சுடுதல் உள்பட பல துறைகளில் அஜித் ஆர்வம் செலுத்தி வருகிறார். இது அஜித்துடைய ரசிகர்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது. இதனிடையே, திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கடந்த 27-ம்தேதி அஜித் பங்கேற்றிருக்கிறார்.
இதில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர், அஜித்தும் கடந்த 27-ம் தேதி மாஸ்டர் என்ற பிரிவில் பங்குபெற்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர், போட்டி நடைபெறும் வளாகத்தில் குவிந்து அஜித்துக்கு அன்புத் தொல்லை கொடுத்தனர்.
இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில், அஜித் அணியினர் மொத்தம் 6 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் சென்டர் ஃபையர் பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ( International Shooting Sports Federation (ISSF) ஆகிய 4 பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை அஜித் அணி வென்றுள்ளது.
இதேப்போல் 50 மீட்டர் ஃபையர் பிஸ்டல் மற்றும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
மேலும், நிறைய பிரிவின் கீழ் போட்டி போட்டுள்ள அஜித்திற்கு 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.