துருக்கி- சிரியா நிலநடுக்கம்-தம்பியை இடிபாடுகளுக்குள் பத்திரமாக பாதுகாத்த சிறுமி…மனதை கலங்கடிக்கும் வீடியோ

February 8, 2023 at 9:31 pm
pc

துருக்கி மற்றும் சிரியாவில் பல நிலநடுக்கங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்புகள் கவலையை ஏற்படுத்துவதற்கு மத்தியில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் 7 வயது சிரிய சிறுமி தனது தம்பியை பாதுகாக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் 5.5 முதல் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பல நிலநடுக்கங்களில் 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உட்பட பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

7 வயது சிறுமி

இந்நிலையில், சிரியாவில் 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு அடியில் தனது சகோதரனை பாதுகாத்து வைத்திருந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

இடிபாடுகளுக்குள் சிறுமி தனது தம்பியுடன் சிக்கியிருப்பதை புகைப்படம் காட்டுகிறது. மீட்பதற்காகக் காத்திருக்கும் சிறுமி, தன் சகோதரனைப் பாதுகாப்பதற்காக அவனது தலையில் கையை வைத்திருக்கிறாள்.

செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முகமது சஃபா, புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார், இருவரும் 17 மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும், பாதுகாப்பாக வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

மனதை கலங்கடிக்கும் வீடியோ

மேலும், வைரலாகிவரும் அந்த வீடியோ கிளிப்பில், சிறுமி தனது சகோதரனின் தலையில் கையை வைத்து, அவனை மார்போடு அணைத்து, ஒரு துணை மருத்துவரிடம் பேசுவதைக் காட்டியது.

அந்தச் சிறுமி துணை மருத்துவரிடம், “மாமா, என்னை வெளியே இழுங்கள, நீங்கள் என்ன கேட்டாலும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரனாக இருப்பேன்!” என்று கூறியதாக கூறப்படுகிறது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website