துஷாரா விஜயனா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்..!

January 3, 2024 at 6:49 pm
pc

திரையில் குடும்பப்பாங்கான அதே நேரத்தில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்த நடிகை துஷாரா விஜயன் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘போதை ஏறி போச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதன் பின்னர் அவர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்திருந்தார். இதனை அடுத்து மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ மற்றும் தனுஷின் 50வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாடிய துஷாரா விஜயன் பீச்சில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளதுள்ளனர். திரையில் தோன்றிய துஷாராவுக்கும் இன்ஸ்டாவில் தோன்றியருக்கும் துஷாராவுக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website