தூக்கிவிட்டவரை கண்டுகொள்ளாத விஜய்!

June 13, 2023 at 10:35 am
pc

விஜய் இப்போது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். அவருடைய படங்களும் பல கோடி வசூல் செய்து வரும் நிலையில் 200 கோடி விஜய்க்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விஜய்யின் படத்தை தயாரித்து வருகிறார்கள்.

இப்போது லியோ படத்தை லலித் தயாரித்து வரும் நிலையில் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த சூழலில் தன்னுடைய கஷ்டகாலத்தில் தனக்கு உதவிய தயாரிப்பாளரை இப்போது விஜய் கண்டு கொள்ளவில்லையாம். ஆகையால் அவரை தன்வசப்படுத்த 30 கோடி செலவு செய்து வீடு வாங்கியுள்ளார்.

அதாவது விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்க்கு மாமன் முறை வரும். கொரோனா சமயத்தில் யாரும் படங்களை வெளியிடாத நேரத்தில் 50 சதவீத இருக்கையுடன் மாஸ்டர் படத்தை சேவியார் வெளியிட்டார். படமும் நல்ல வசூலை பெற்று தந்தது.

அதுமட்டுமின்றி லோகேஷ், விஜய் கூட்டணிக்கு அடித்தளம் போட்டது மாஸ்டர் படம் தான். இதனால் தான் இப்போது லியோ படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். ஆனால் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எங்க போனார் என்பது தெரியவில்லை. மேலும் விஜய் அவரைப் பார்த்தாலும் பேசுவதில்லை.

இந்நிலையில் விஜய் ஆரியபுரத்தில் தனது பிரம்மாண்ட பொது அலுவலகத்தை தொடங்கி இருக்கிறார். இதே அப்பார்ட்மெண்டில் இப்போது சேவியர் பிரிட்டோ 30 கோடி கொடுத்த பிரம்மாண்ட வீடு வாங்கி இருக்கிறாராம். இவ்வளவு செலவு பண்ணி வீடு வாங்க விஜய் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஒரே இடத்தில் இருப்பதால் எப்போதாவது விஜய்யை பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தால் மீண்டும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளாராம். ஆகையால் விஜய் தனது மாமாவுக்கு செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website