தூதுவளை இலை சளியை விரட்டும்னு தெரியும், ஆண்மை குறைபாடு மற்றும் விஷத்தையும் குறைக்கும் என்று தெரியுமா..?

April 5, 2023 at 7:03 am
pc

தூதுவளை செடியில் இருக்கும் பூ, காய், இலை என்று ஒவ்வொரு பாகமும் மனித குலத்திற்கு பல் நன்மைகளை வாரி இறைக்கிறது. அந்த வகையில். தூதுவளை இலைகள் தரும் பல்வேறு மருத்துவ நலன்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சளி:

தூதுவளை இலைகளை வைத்து ரசம் அல்லது சூப் செய்து தொடர்ந்து 3 நாட்கள் எடுத்துக் கொண்டால் சளி , இருமல், காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றை நீக்கி உடலை வலிமை அடையச் செய்யும்.

ஆண்மை குறைபாடு சரியாகும்:

நரம்புத் தளர்ச்சி பாதிப்புக்கு உள்ளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு இருக்கும். ஆகையால் அவர்கள் இல்லற வாழ்க்கையில் பல சிக்கல்கள் நிறைந்து காணப்படும். அப்படியானவர்கள் தூதுவளைஇலையை அவர்கள் டயட்டில் மூலம் உடல் வலுவடைந்து நரம்பு தொடர்பான பிரச்னையை சரி செய்து ஆண்மைக் குறைபாட்டை நீக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

நம்மில் அனைவர்க்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் ஞாபகம் மறதி ஏற்படுவது சகஜம் தான் .இதனை சரி செய்ய அல்லது ஏற்படாமல் இருக்க நமது அன்றாட வாழ்வில் தூதுவளையை உணவில் எடுத்துக் கொண்டு வர மூளையில் இருக்கும் செல்கள் வலிமை பெற்று வயதான காலத்திலும் நினைவாற்றல் குறையாமல் இருக்கும்.தவிர குழந்தைகளுக்கு இதனை தொடர்ந்துகொடுத்து வர அவர்களின் நினைவுத் திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.


விஷத்தை முறிக்கும்:


யாரோ ஒருவருக்கு எதிர்பாராத விதத்தில் தேள், பூரான், தேனி அல்லது வேறு விதமான விஷப் பூச்சிகள் கடித்தால் தூதுவளை பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க செய்தால் விஷ முறிவை தடுத்து நிறுத்தும். இதனை பாம்பு கடித்த நபருக்கு உடனடியாக செய்து கொடுத்தால் விஷ முறிவை சரி செய்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

எலும்பு வலுவடையும்:

தூதுவளை இலையில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளதால் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு மற்றும் பற்கள் வலிமை பெரும் தவிர பெண்களுக்கு உண்டாகும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.

சர்க்கரை நோய்:

இந்த இலை கசப்பு தன்மை கொண்டு இருப்பதால் இதனைச் உணவில் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வரஒரு நல்ல பலனை விரைவில் பெறுவார்கள்.. உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த தூதுவளை இலைகளை தினமும் நமது உணவில் சேர்த்து பல்வேறு நன்மைகளை பெற்று வாழும் வாழ்வை வளமோடும் நலனோடும் வாழுங்கள்!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website