தெற்காசிய நாடொன்றில் மகள்களை திருமணம் செய்யும் தந்தைகள்!

December 7, 2023 at 8:49 am
pc

மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை மக்களிடம் தந்தை, சகோதர, சகோதரிகளிடையே திருமணம் செய்யும் பழக்கம் இல்லை.

அதிலும், உறவினர்களிடையே திருமணம் செய்தால் ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறக்கும் என்ற அறிவியல் ஒருபக்கம் இருந்தாலும், உறவுகளுக்கு இடையே திருமணம் செய்யக்கூடாது என்று பரவலாக காணப்படுகிறது.

ஆனால், இந்த நாட்டில் மட்டும் மகள், தந்தையிடையே திருமணம் செய்யப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள மண்டி இன பழங்குடி மக்கள் இந்த விசித்திரமான பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள், மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகள் ஆகியவற்றை பொறுத்தவரை பிற மக்களிடமிருந்து தனித்துவமாக தான் இருக்கின்றனர்.

இந்த இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை இழந்து கைம்பெண்ணாக மாறினால், அந்த இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரை மறுமணம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணுக்கு மகள் இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் மகளாக கருதுவதில்லை. மாறாக, அந்த பெண் பருவம் எய்தியதும் அவரையும் சேர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்தால் மட்டுமே பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்வார்கள்.

அதாவது, பெண் குழந்தைக்கும் சேர்த்து வாழ்க்கை உத்தரவாதத்தை ஆண்கள் கொடுப்பதால் இந்த திருமணங்களை மண்டி பழங்குடியினர் ஏற்றுக்கொள்கின்றனர்.

தற்போது, இந்த இனத்தைச் சேர்ந்த ஓரோலா என்ற பெண்ணின் திருமணம் நடைபெற்றது. இவரின் தந்தை இறந்த பிறகு, தாயை திருமணம் செய்த நபர் இந்த பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website