தேனுடன் பாதாம் , முந்திரி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ….??இவ்ளோ நாள் தெரியாம போச்சே …..!!

June 13, 2022 at 8:47 am
pc
  • முந்திரிப் பருப்பில் உள்ள கொழுப்புக்கள் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவற்றைக் கரைத்து மூளையின் செயல்திறன் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது.
  • இவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் இதய நலத்தையும் பேணுகின்றன.
  • முந்திரி பருப்பில் மிக அதிகமாக உள்ள காப்பர் சத்தானது இரும்புச்சத்தின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
  • எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்பட இப்பருப்பில் உள்ள பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் புரதத்தொகுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை உறிஞ்ச மிகவும் அவசியமாகிறது. இது செல்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பையில் கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கிறது.
  • நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க இப்பருப்பில் உள்ள துத்தநாகச் சத்தானது நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, நுண்ணுயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.
  • முந்திரிப் பருப்பினை கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும்போது, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றலலை அதிகரிக்கச் செய்கிறது.
  • இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
  • இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை.
  • இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
  • இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். சீத்தாப்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
  • பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website