தொடர் பணிநீக்கத்தில் விப்ரோ.. பதற்றத்தில் ஊழியர்கள்.. என்ன காரணம்?

January 21, 2023 at 4:57 pm
pc

கடந்த சில மாதங்களாகவே பிரபல நிறுவனங்கள் பலவும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணவீக்கம், பொருளாதார மந்தநிலைக் காரணமாக பணிநீக்கம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிநீக்கமானது அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு மூன்லைட்னிங் சம்பவத்தை தொடர்ந்து விப்ரோ மற்றும் டிசிஎஸ் போனற பிரபல ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. அதனையடுத்து நேற்றைய தினம் (ஜனவரி 20, 2023) கூகுள் நிறுவனமும் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

அதனையடுத்து விப்ரோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் புதிதாக சேர்ந்த 1 வருடமே ஆன 452 ஊழியர்களைம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

பணியில் சேர்ந்து 1 வருடம் ஆன நிலையில் அவர்களி சில உள் சோதனையில் பயிற்சிக் காலம் கழித்தும் சரிவர வேலை செய்யாததால் அவர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பெரிய பெரிய நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

விப்ரோ நிறுவனத்தின் உள் சோதனைக்குப் பிறகு 452 புதிய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பணிநீக்கக் கடிதத்தில் பணியாளர்கள் பயிற்சிக்காக நிறுவனம் செலவழித்த ரூ.75,000 செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் நிறுவனம் அதை தள்ளுபடி செய்துள்ளது.

“நீங்கள் செலுத்த வேண்டிய பயிற்சிச் செலவு ரூ.75,000/- தள்ளுபடி செய்யப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்றும் நிறுவனம் பணிநீக்கம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 2023 இல், விப்ரோ அதன் Q3 FY23 முடிவுகளை அறிவித்தது. அதில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் நிகர லாபம் ரூ. 2,969 கோடியாக பதிவு செய்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website