தோனி படத்தை தவறவிட்ட பிரபல தென்னிந்திய நடிகை!
பாலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து படங்களில் ஒன்று எம்.எஸ். தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், கேப்டனுமான தோனியின் வாழ்க்கை வரலாறை மையாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர். இப்படத்தில் தோனியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். மேலும் கியாரா அத்வானி, திஷா பாட்னி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இந்த நிலையில், திஷா பாட்னி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தானாம். இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
“எம்.எஸ் தோனியின் பயோபிக் படத்தில் திஷா பாட்னி கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. காஸ்ட்யூம் தேர்வு, ஸ்கிரிப்ட் படிப்பது எல்லாம் செய்தேன். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தேதி மாறியதால் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை.
அப்போது நான் ராம் சரணுடன் இணைந்து புரூஸ் லீ எனும் தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அப்படி ஒரு நல்ல படத்தை நான் தவறவிட்டதற்கு ரொம்ப வருத்தப்பட்டேன்” என கூறியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.