தோல்வியை தழுவவிருக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’!

May 8, 2023 at 11:43 am
pc

பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்தது. முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், முதல் நான்கு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது. பின் உலகளவில் இப்படத்திற்கு வசூல் குறைய துவங்கியது.

அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் எதிர்பார்க்காத வீழ்ச்சியை பொன்னியின் செல்வன் 2 வசூல் சந்தித்துள்ளது. அதன்படி தற்போது தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்முலம் ரூ. 6 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் ரூ. 4 கோடி ஷேர் கிடைத்தால் மட்டுமே பொன்னியின் செல்வன் படம் தெலுங்கில் ஹிட்டாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இனி வரும் நாட்களில் ரூ. 4 கோடி ஷேர் கிடைப்பது என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. இதனால் தெலுங்கில் தோல்வி நிலையில் பொன்னியின் செல்வன் 2 உள்ளது என தெரிவிக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website