நடக்க முடியாமல் அவதி… படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்!

November 26, 2022 at 9:39 pm
pc

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாடலாக தனது கெரியரை தொடங்கிய சமந்தா, இன்று பாலிவுட் ஹாலிவுட் என வளர்ந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் யே மாயா சேஸவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சமந்தா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதுடன் பட்டையை கிளப்ப தொடங்கினார்.

தமிழ் தெலுங்கு என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டானார் நடிகை சமந்தா. ஃபிலிம் ஃபேர் விருது, நந்தி விருது என அடுத்தடுத்து விருதுகளை குவித்துள்ளார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் விளம்பர படங்கள் என கலக்கி வருகிறார் சமந்தா.

நடிகை சமந்தா தெலுங்கில் யே மாயா சேஸவே என்ற படத்தில் நடித்த போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் கொண்டார். 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை டேட்டிங்கில் இருந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் 2017 ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து

ஆனால் நான்கே ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். சமந்தா விவாகரத்துக்கு காரணம் என பல்வேறு வதந்திகள் பரவின. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியானது. இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

மயோஸிடிஸ்

இந்நிலையில் நடிகை சமந்தா மயோஸிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த அரிய நோய் பாதிப்பால் தன்னால் படுக்கையில் இருந்து எழும் போது ஒரு அடிக்கூட வைக்க முடியவில்லை என கண் கலங்கினார். தனது நோயில் இருந்து தான் மீண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார் சமந்தா.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை, அவர் வீட்டில் ஓய்வு எடுப்பதாக கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

படுத்த படுக்கை

இந்நிலையில் சமந்தா குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது சமந்தாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவால் சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார் என்றும் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் தீயாய் பரவும் இந்த தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website