“நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள் இப்படித்தான் இருந்தது” – பிரபலம் உருக்கம்!

April 24, 2023 at 3:56 pm
pc

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்காகவே வாழ்ந்த மிகப்பெரிய கலைஞன். இவர் போல் நடிப்பதற்கு இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வர வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவர். இன்றுவரை ஒரு காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என இவருடைய படங்களை பார்த்து தான் பல கலைஞர்கள் கற்றுக் கொண்டதாக தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

நடிப்பிலேயே பல பரிமாணத்தை காட்டியவர் சிவாஜி கணேசன். ஒரு மன்னனாக, சுதந்திரப் போராட்ட வீரனாக, நீதிபதியாக, போலீஸ் ஆக அத்தனை கேரக்டர்களுக்கும் கச்சிதமாக பொருந்தி நடித்தவர். இன்றைய தலைமுறைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பார், கப்பலோட்டிய தமிழன், இராஜராஜ சோழன் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிவாஜி படத்தை பார்த்தே தெரிந்து கொள்கின்றனர்.

60 முதல் 80களின் காலகட்டம் வரை ஹீரோவாகவே நிலைத்து நின்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பாரதிராஜா இயக்கத்தில் இவர் நடித்த முதல் மரியாதை திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தனி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் அதன் பின்னர் கமல், ரஜினி, சத்யராஜ், பாக்கியராஜ் போன்றவர்களின் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் அடித்து அதிலும் அசத்தினார் என்று தான் சொல்ல வேண்டும்.

தளபதி விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் அவருக்கு அப்பா கேரக்டரில் நடித்த சிவாஜி கணேசனின் நடிப்பை பார்க்கும் பொழுது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அவருடைய நடிப்பு இளமையாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையே ரசிகர்களுக்கு உணர்த்தியது. சிவாஜி தன்னுடைய முதுமை காலத்தில் கிட்டத்தட்ட ஒரு குழந்தையாகவே மாறிவிட்டார். மொத்த பொறுப்புகளையும் தன் மகன்களிடம் கொடுத்துவிட்டு வரும் வாய்ப்புகளில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார்.

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த வேளையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவருடைய இறுதி நிமிடத்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் கலைபுலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அதில் சிவாஜி தன்னுடைய பேத்தியின் வாழ்க்கையை எண்ணி ரொம்பவே வருத்தத்தில் இருந்ததாக அவர் சொல்லியிருந்தார்.

இறுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருந்ததாம். இனி அந்த செயற்கை சுவாசமும் உதவாது என்று சொல்லிய மருத்துவர்கள் அவருடைய மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபுவிடம் நீங்களே உங்கள் கையால் அதை எடுத்து விடுங்கள் என்று சொன்னார்களாம். இருவருமே ரொம்பவும் கதறி அழுது கொண்டிருந்த வேளையில் கலைப்புலி தாணு தான் அந்த செயற்கை சுவாசத்தை தன் கைகளால் அகற்றி இருக்கிறார். சில வினாடிகளிலேயே மாபெரும் கலைஞன் சிவாஜியின் உயிரும் பிரிந்து விட்டதாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website