நடிகர் பிரதாப் போத்தன் மரணம்!! நடிகை ராதிகாவுடன் முதல் திருமணம்! இரு திருமணமும் தோல்வி……

July 15, 2022 at 1:11 pm
pc

தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகர் பிரதாப் போத்தன் பூமியில் இருந்து இன்று விடைபெற்று கொண்டார்.

அவருக்கு இரு முறை திருமணம் ஆகி இரண்டு திருமணமும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தனது இறுதிகாலத்தில் யாருமில்லாமல் தனியாக வாழ்ந்த பிரதாப் சென்னையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் பிறந்த பிரதாப் சிறு வயதிலேயே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். பின்னர் ஊட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்து அங்கே பி.ஏ எக்கனாமிக்ஸ் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு மேடை நாடகங்களில் நடித்தார்.

மேலும், சிறு வயதிலிருந்து சினிமாவிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இவரது அண்ணன் ஹரி ஒரு சினிமா தயாரிப்பாளரும் கூட.

மலையாளத்தில் பரதன் இயக்கிய ‘தகரா’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் இலங்கை தமிழரான பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா படத்திற்கு ஆல்பத்தை பார்த்துவிட்டு இவரை வைத்து அழியாத கோலங்கள் படத்தில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

இந்த படத்தில் பிரதாபின் நடிப்பு பாலுமகேந்திராவிற்கு மிகவும் பிடித்துப் போக அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களிடம் இவரை சிபாரிசு கொடுத்தார். நடிக்கவும் வைத்தார்.

பாலு மகேந்திராவால் தான் பிரதாப்புக்கு மிகப்பெரிய வாழ்வு கிடைத்தது எனவும் சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்துகொண்டு இருக்கும் போதே நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் செய்துகொண்டார். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவரையும் திருமணமான 22 ஆண்டுகளில் விவகாரத்து செய்துவிட்டார். 

இந்த தம்பதிக்கு கேயா என்ற மகளும் இருக்கிறார். அவரும் இவரை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிரதாப் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நடித்த மற்றும் இயக்கிய கதாபாத்திரங்கள் மூலம் நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website