நடிகர் விஜய் ராகுல் காந்தியால் கட்சி ஆரம்பித்தார்: விஜயதரணி சர்ச்சை!

August 28, 2024 at 10:03 am
pc

நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்குவதற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று விஜயதரணி கூறியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விஜயதரணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளை துறந்து பாஜகவில் இணைந்தேன்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்தலில் நான் போட்டியிடுவதாக பேசப்பட்டது. பின்பு, முதல் வேட்பாளர் பட்டியல் வந்தபோது என் பெயர் இருந்தது.

ஆனால், எனக்கு பதிலாக மூத்த தலைவர் ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக பிடிவாதமாக இருந்தார். அதனால், அவருக்காக நான் பணியாற்றினேன். ஆனால், கடந்த தேர்தலைவிட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே வந்தது.

நடிகர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்த போது காங்கிரசில் ஒரு பதவி மட்டும் கேட்டார். அதற்கு ராகுல் காந்தி, நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரம். நீங்கள் ஒரு கட்சியையே தொடங்கி பணியாற்றலாம் என்றார். அதனால் தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார்” என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website