நடிகையுடன் சேர்ந்து அதிமுகவில் இணையும் அண்ணாமலை.

November 7, 2023 at 7:04 pm
pc

நானும் அண்ணாமலையும், நாங்கள் இருவரும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம் என்று நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். அப்போது, அவர் விசிகவில் இணையவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தன.இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் கெளதமி ஆகிய இருவரும் தீபாவளிக்கு முன்னதாக அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.அதனை மறுத்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நானும் அண்ணாமலையும் நாங்கள் இருவரும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம். செய்தியை சரியாக போடுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website