நடிகை அதிதியுடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த்…
இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சித்தார்த் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதிதியின் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சித்தார்த் அதில் “என் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.