நடிகை கனகாவின் சோகமான வாழ்க்கை..என்ன நடந்தது ?

May 14, 2023 at 2:31 pm
pc

நடிகை கனகா

80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா, இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

கனகா தனது சினிமா பயணத்தில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் 2007ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமாரை திருமணம் செய்தார் என்றும் பின் சில நாட்களிலேயே அவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.மோசமான நிலையில் உள்ள தனது வீட்டில் கனகா யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கிறார்.

பிரபலம் கூறிய தகவல்

கனகா குறித்தும், அவரது தனிமை வாழ்க்கை குறித்தும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. ராமசந்திரன் என்பவர் கனகாவிற்கு பிஏவாக இருந்துள்ளார், அவர் கனகாவுடன் படப்பிடிப்பு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்தையும் செய்திருக்கிறார்.

கனகாவை காதலித்தும் வந்திருக்கிறார், ஆனால் அவரை தவறாக புரிந்துகொண்ட கனகா அவரை போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

ராமசந்திரன் இறப்பிற்கு பிறகு கனகாவுக்கு அவர் தன்னை காதலித்தது தெரிய வந்துள்ளது.

இதனால் மணமுடைந்து போன கனகா சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத் தானே வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார் என திரைப்பட விமர்சகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website