நடிகை கனகா வீட்டில் தீ விபத்து !!ஏராளமான பொருட்சேதம்…

December 24, 2022 at 12:09 pm
pc

நடிகை ஒருவர் தனது வீட்டில் விளக்கேற்றும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது வீட்டில் விலைமதிப்புள்ள ஏராளமான பொருட்கள் நாசம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா என்பதும் இவர் ரஜினிகாந்த் நடித்த ’அதிசய பிறவி’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அறிமுகமான முதல் படமான ’கரகாட்டகாரன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 90களில் முன்னணி நாயகியாக இருந்த கனகா கடந்த சில வருடங்களாக திரையுலகில் வாய்ப்பின்றி உள்ளார் என்பதும் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய வயதுக்கேற்ற கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாகவும் தற்போதைய சினிமா தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டில் நடிகை கனகா வசித்து வந்த நிலையில் அவரது வீட்டில் விளக்கேற்றி கொண்டிருக்கும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் கனகா வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள் எரிந்து சாம்பலாகி தாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளதாக தெரிகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website