நடிகை ரம்யா மாரடைப்பால் மரணமா?நடந்தது என்ன..

September 6, 2023 at 6:33 pm
pc

சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. அப்படித்தான் ஒவ்வொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது. நல்லா இருப்பவர்களை கூட இறந்து விட்டார்கள் என்று புரளியை கிளப்பி குளிர் காயும் சிலரும் இருக்கிறார்கள்.

அப்படித்தான் தமிழ் ரசிகர்கள் குத்து ரம்யா என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை மாரடைப்பால் இறந்து விட்டார் என்று ஒரு வதந்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. 40 வயதே ஆகும் ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு என்று இந்த செய்தியை பார்த்த பலரும் பதட்டத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

அதன் பிறகு தான் இது வெறும் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரம்யா தற்போது ஜெனிவாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும் நலமுடன் தான் இருக்கிறார் என்றும் உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதை பார்த்த பிறகு தான் ரசிகர்களுக்கு மூச்சே வந்தது. ஆனால் இப்படி ஒரு வதந்தி பரவியதற்கு என்ன காரணம் என்று பார்க்கையில் அரசியல் சமாச்சாரம் தான் என்று தெரிய வந்திருக்கிறது.

அதாவது நடிப்பில் பிசியாக இருந்த ரம்யா கடந்த 2012ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்ற அவர் எம்பியாக பதவியேற்றார். அதன் பிறகு வந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இவர் அரசியலில் இருந்து விலகி பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இப்படி ஒரு வதந்தி பரவியதற்கு பின்னால் சில அரசியல் தந்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ரம்யா போட்டியிடக் கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதாம். அந்த ஒரு கோணத்தில் தான் இந்த வதந்தி குறித்து பேசப்பட்டு வருகிறது. என்ன இருந்தாலும் இப்படியா முதுகில் குத்துவது என்று ரசிகர்கள் இந்த விஷயத்தால் இப்போது புலம்பி வருகின்றனர்.

மேலும் நேருக்கு நேர் மோதுவதை விட்டுவிட்டு, இப்படி ஒரு கேவலமான விஷயத்தை எந்த மனுஷனும் செய்ய மாட்டான் என்று ரம்யாவும் இந்த விஷயம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டு வருகிறாராம். அந்த வகையில் அரசியல் வட்டாரத்திற்கு ரம்யா காட்டிய பயம் தான் இது போன்ற மட்டமான வேலைக்கு காரணமாக இருக்கிறது என பேசப்பட்டு வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website