நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் மரணம்!

April 29, 2023 at 3:41 pm
pc

நடிகை வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மூன்றாவது திருமணம் 

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். 

அவரது மூன்றாவது திருமணம் பரபரப்பையும், சமூக வலைத்தளத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியது. அத்துடன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும், வனிதாவுக்கு இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.

பீட்டர் பாலுடன் விவாகரத்து

ஆனால், பீட்டர் பாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வனிதா அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் கணவர் மரணம் 

இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் மனைவியான வனிதா எந்த தகவலை இதுதொடர்பாக பொதுவெளியில் வெளியிடவில்லை. 

இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் வனிதாவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website