நடிகை ஸ்ரீதேவியின் மகள் வாங்கிய ஆடம்பர பங்களா!! ரசிகர்களை வாயை பிளக்கச் செய்யும் கோடிகள்…

November 7, 2022 at 8:08 pm
pc

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கி ரசிகர்களை வாயை பிளக்கச் செய்துள்ளார். 

ஸ்ரீதேவியின் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

ஹாட் போட்டோஸ்

தற்போது பவால் மற்றும் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் மஹி ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

புதிய பங்களா

இந்நிலையில் ஜான்வி கபூர் பல கோடியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு duplex வீட்டை வாங்கியிருக்கிறாம் ஜான்வி கபூர். அந்த வீட்டின் மதிப்பு 65 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

வரி மட்டுமே…

இந்த ஆடம்பர பங்களா 6,421 சதுரஅடி பரப்பளவு கொண்டது என்றும் அதற்கான stamp duty மட்டுமே 3.90 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜான்வி கபூர் இத்தனை கோடிகளில் வீடு வாங்கியிருப்பதை கேட்டு ரசிகர்கள் வாயை 

பிளந்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website